பெர்த்: பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் கள நடுவர் அவுட் வழங்கவில்லை. இதை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் மேல்முறையீடு செய்தனர்.
இதில் மட்டை முதலில் கால்காப்பில் படுவது போல் தெரிந்தது. ஆனால் பக்கவாட்டு கோணத்தை பார்த்த போது பந்து மட்டையை நெருங்கும் போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அவுட் கொடுத்தார்.