Category: சிந்தனைக் களம்

பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?

மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்குக் காற்று மாசு தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.…

மூட நம்பிக்கை – மனித குலம் எங்கே செல்கின்றது

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் நரபலி சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

ராமநாதபுரம்: பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு துன்புறுத்தல் தரக்கூடாது என்ற நோக்கில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் ரம்மியால் பலியாகும் பல உயிர்கள் – புதிய நம்பிக்கை

ஆன்லைன் ரம்மியை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக முந்தைய அதிமுக அரசு ெகாண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.…

வனங்களை காத்தால் நாடு வளமாகும்

வனங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. வனங்களை காத்தால் நாடு வளமாகும். கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினை கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணிப்பதில் வனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால்தான், வனத்தை பாதுகாக்க தமிழக அரசு…

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?; மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? – முழுமையான விளக்கம்

கரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி…

கேரளாவில் ஸ்டாலின்: “ஆளுநர், அதிகாரம், கூட்டாட்சி” – இவை பற்றி என்ன பேசினார்? முழு விவரம்

இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

சீனாவை நம்பி ஏமாந்த ராஜபக்சே குடும்பம்.. “டிராகன்” சகவாசமே வேண்டாம்.. தெறித்து ஓடிய நாடுகள்! பின்னணி

கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் தெற்காசியாவில் இருக்கும் பல்வேறு நாடுகள் சீனாவை பார்த்து தெறித்து ஓட தொடங்கி உள்ளன. எங்கே சீனா தங்களுக்கும் கடன் கொடுத்து சிக்கலை உண்டாக்குமோ என்ற அச்சம் தெற்காசிய நாடுகளுக்கு…

நெகிழி விஸ்வரூபம்! | நெகிழி மறுசூழற்சி குறித்து தில்லியில் நடைபெற்ற சா்வதேச மாநாடு பற்றிய தலையங்கம்

நெகிழிப் பொருள்கள் குறித்தும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகமும், அகில இந்திய நெகிழி உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த…

ஐந்தில் நான்கு: பாஜகவின் வெற்றிப் பயணம்!

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக…

மாசுக்களைக் குறைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் இன்றைய திருநாளை

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நமது இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்ட பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைவில் முழுவதுமாக விடுபடுவோம் என்ற நம்பிக்கையை இந்தத் தீபாவளித் திருநாள் வழங்கட்டும். புதிய உற்சாகத்தோடும் புதிய தெம்போடும் இனி வரும் நாட்களை எதிர்கொள்வோம். தீபாவளிப் பண்டிகையைப் பட்டாசு வெடிச்…

ஒலிம்பிக்கின் உண்மையான சாதனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று இன்னும் விடைபெறாத நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டி, உலக மக்களின் உற்சாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.…

ஓயாத கொரோனா அலை

கொரோனா 3-வது அலை குறித்த அச்சம் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே உள்ளது. கொரோனாவின் தாக்கம் இன்னமும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் குறைவதாக இல்லை. அதிகபட்சமாக கேரளாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தலை விரித்தாடுகிறது. கேரளாவின் பாதிப்புகள் தமிழகத்தையும் தாக்குமோ என்ற கவலையில்…

கூடுதல் மாணவர்களுக்குத் தயாராக இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14-ல் தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பெருமளவில் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. பெருந்தொற்றால் வேலையிழப்புகள் அதிகரித்து, பெற்றோர்களின் வருமானம் குறைந்ததே இதற்கான காரணம் என்று…

லட்சத்தீவு: விமர்சனமாகும் அரசு நடவடிக்கை, நியாயப்படுத்தும் ஆட்சியர் – என்ன சர்ச்சை?

சமீப காலங்களில் லட்சத் தீவுகளில் நடைபெற்று வரும் நிர்வாகரீதியிலான மாற்றங்கள் விமர்சனத்திற்குள்ளாகி தற்போது அது பூதாகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலாவிற்கு பெயர் போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக…

பல கட்டத் தேர்தல்கள் இதோடு முடியட்டும்!

ஒருவழியாக ஐந்து மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருப்பது நிம்மதிப் பெருமூச்சைத் தருகிறது. சென்னை மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களின் கடுமையான சாடல்களின் பின்னணியில், வாக்கு எண்ணிக்கை சார்ந்து தேர்தல் ஆணையம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசுவாசம் தருகின்றன. வாக்குப்பதிவுச் சாவடிகளிலுமே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்…