Category: விமர்சனம்

Latest comments and review about health and medicines in Tamilnadu, India and International from all leading Tamil News Papers

`புதின் குறித்த அந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’ – ஜோ பைடன் விளக்கம்

புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார். உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டார். ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: வலுக்கும் விவாதங்கள்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்- 2021, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்கள் வாக்காளர்களிடம் அவர்களது ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இல்லாதபட்சத்தில் வேறு அடையாளச் சான்றுகளைக் காட்டவும் இச்சட்டத் திருத்தம்…

அரசைக் கேள்வி கேட்பதும் அடிப்படை உரிமை!

பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக, அவதூறு வழக்கைச் செல்லாது என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அரசின் நடவடிக்கைகள் குறித்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் தேசத் துரோகத்தின் கீழ் வராது என்று வழிகாட்டும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்பால்…

லட்சத்தீவு: விமர்சனமாகும் அரசு நடவடிக்கை, நியாயப்படுத்தும் ஆட்சியர் – என்ன சர்ச்சை?

சமீப காலங்களில் லட்சத் தீவுகளில் நடைபெற்று வரும் நிர்வாகரீதியிலான மாற்றங்கள் விமர்சனத்திற்குள்ளாகி தற்போது அது பூதாகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலாவிற்கு பெயர் போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக…

அரசே, தன்னிலை உணர்!

அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும்கூட சாதிய வன்மத்தோடு சக மனிதர்களைக் கொல்லத் துணியும் வெறுப்புச் சூழலையும், இத்தகு கொலைகள் தலித் சமூகத்தைத் தவிர ஏனையோரிடம் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் கடக்கும் இயல்பு நிலையையும் நம் சமூகம்…

தேர்தல் முடிவுகளைத் தாமதப்படுத்துவது சரியா?

ஏறக்குறைய ஒரு மாத காலக் காத்திருப்பு. போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் ஒருசேரப் பரிதவிப்போடு நிற்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளுக்கும் ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் இன்னமும்கூட முடிவில்லை. அரசியல் களம் மட்டுமல்ல, அரசின் நிர்வாகப்…

மாநிலத் தேர்தல் ஆணையர் சுதந்திரமானவராக இருப்பதை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளை அரசு நிர்வாகத்தின் முழுமையான மூன்றாவது அடுக்காக மாற்றி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகியும் அந்த அமைப்புகளுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. உள்ளாட்சிக்கு உரிய அதிகாரம் தன்னாட்சி இல்லாததற்கு இதுவே…

உயரதிகாரியின் அத்துமீறல்: காவல் துறைக்குத் தலைக்குனிவு

காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு டிஜிபியாகப் பொறுப்பு வகித்த மூத்த அதிகாரி மீது காவல் பணித் துறை அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் பாலியல் தொந்தரவுப் புகாரானது ஒட்டுமொத்தக் காவல் துறைக்குமே தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். அரசின் முக்கியப்…

பெட்ரோல் விலை உயர்வு: மறைமுக வரிகளைக் குறைக்குமா ஒன்றிய அரசு?

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்திருக்கும் ஆலோசனையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் அவசியம். கச்சா எண்ணெய் விலை உயர்வாலும்…

ஜனநாயகம்தான் சூச்சியின் உண்மையான வெற்றி!

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ (என்.எல்.டி.) பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மியான்மரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரான தடுப்புச் சுவராக மக்கள் ஆங் சான் சூச்சியை இன்னமும்…

அர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாட, அவரிடமும் அவரது சக நீதிபதிகளிடமும் ஒப்பளிக்கப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டக் கடமையை ஆற்றுவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழியிருக்க முடியாது. ‘உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றம்… அரசமைப்புச் சட்ட நீதிமன்றமே…

பிஹார் தேர்தல்: நல்லாட்சிக்கான தேட்டம்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நிதீஷ் குமார், பிஹாரின் முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்கவிருப்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. ஆனாலும், மகிழ்ச்சியில் திளைக்க முடியாத எண்களையே மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா…

மீட்சி பெறுமா காங்கிரஸ்?

ஒரு நாட்டின் எதிர்காலம் அதை ஆளும் கட்சியிடம் மட்டும் இல்லை; எதிர்க்கட்சிகளும் சேர்ந்தே அதைத் தீர்மானிக்கின்றன. இக்கட்டான ஒரு காலகட்டத்தில் நாட்டின் மூத்த கட்சியும் இன்றைய பிரதான எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை வெறுமனே அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று…

நீதித் துறைக்குத் தேவை சகிப்புத்தன்மை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைக் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதும் இந்த வழக்கை அது அணுகிவரும் முறையும் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளும் தன்மை அதற்கு இல்லை என்பதையே உணர்த்துகின்றன. நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட இந்த வழக்கில், மூன்று…

எல்லை விவகாரத்தில் தெளிந்த பேச்சு வேண்டும்

உலகமே கொள்ளைநோயை எதிர்கொண்டுவரும் காலகட்டத்தில் நாட்டின் எல்லைப்புறத்தில் நடந்திருக்கும் அத்துமீறல்களும், மோதல்களும், இந்திய வீரர்களின் உயிரிழப்புகளும் மக்களைப் பெரும் ஆத்திரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிற நிலையில், இந்திய அரசு தொடக்கம் முதலாக இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படுத்திவரும் தெளிவற்ற பேச்சு, மக்களின் மனநிலையை…