Category: விமர்சனம்

Latest comments and review about health and medicines in Tamilnadu, India and International from all leading Tamil News Papers

இதுதான் ஜனநாயகம்!

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அரசியலமைப்பு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட பதவிதான் கவர்னர் பதவி. மத்தியில் உள்ள அரசுக்கு ஜனாதிபதியும் மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு கவர்னரும் யூனியன் பிரதேசங்களில்…

புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்

அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே…

ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம்…

கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

இந்தியாவை பாஜக எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரு முக்கியக் காரணங்களுக்காக பாஜகவின் அறிக்கை ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது. முதலாவதாக, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஆட்சி எப்படி இருந்தது…

எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய…

ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், வாக்கு எண்ணிக்கை மேலும் 6 நாட்கள் தாமதமாகும் என்கிறது…

நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

2016 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பில் இத்தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது. 2016 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினராலும் கண்காணிப்புக் குழுவினராலும் ரூ.6 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக எந்த நிலைக்கும் செல்வதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும்…

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்ட போஸ்ட்களில் மத்திய அரசை குறித்து…

ஊடகங்கள் உண்மை பேச அனுமதிக்கப்பட வேண்டும்!

ர ஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டும், பின்னர் அந்த ஆவணங்கள் திருடப்படவில்லை; நகலெடுக்கப்பட்டன என்று அவர் தரப்பில் தரப்பட்ட விளக்கமும் பல கேள்விகளை…

முகிலன் எங்கே? தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சூழலியல், மனித உரிமைப் போராளி முகிலன் காணாமல்போயிருக்கும் சம்பவம், சமூகப் போராளிகள் விஷயத்தில் அரசு இயந்திரம் நடந்துகொள்ளும் முறை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பிப்ரவரி 15-ல் தூத்துக்குடி படுகொலை தொடர்பான காணொளியை வெளியிட்ட…

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு?

மத்திய அரசின் கணக்குக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால உபரியாகத் தருவது என்று முடிவுசெய்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம். மொத்த ஜிடிபியில் 3.4% ஆக நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கும் மத்திய அரசுக்கு இது மிகப் பெரிய ஆறுதல்…

காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? காஷ்மீர் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு…