Category: தேர்தல்

Latest election news all around the world

இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்படவேண்டும்

ஒன்றிய அரசின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்காக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல்…

4 மாநில இடைத்தேர்தல்கள் – அனைத்திலும் பாஜக படுதோல்வி!

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அசன்சோல் மக்களவைத் தொகுதியிலும்…

குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி…

இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்., அமோக வெற்றி! மக்கள் கொடுத்த பரிசு என மம்தா நெகிழ்ச்சி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தலா ஒரு சட்டசபை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ‛‛இது எனது ஆட்சிக்கு மக்கள்…

ஐந்தில் நான்கு: பாஜகவின் வெற்றிப் பயணம்!

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக…

வங்கம், கேரளம், அசாம்: தெளிவான தேர்தல் முடிவுகள்

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில் அசாம், வங்கம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவர்களது தெளிவான முடிவையே காட்டுகிறது. மக்களின் முன்னுள்ள அரசியல் தெரிவுகளில் அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்…

பல கட்டத் தேர்தல்கள் இதோடு முடியட்டும்!

ஒருவழியாக ஐந்து மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருப்பது நிம்மதிப் பெருமூச்சைத் தருகிறது. சென்னை மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களின் கடுமையான சாடல்களின் பின்னணியில், வாக்கு எண்ணிக்கை சார்ந்து தேர்தல் ஆணையம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசுவாசம் தருகின்றன. வாக்குப்பதிவுச் சாவடிகளிலுமே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்…

மாநிலத் தேர்தல் ஆணையர் சுதந்திரமானவராக இருப்பதை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளை அரசு நிர்வாகத்தின் முழுமையான மூன்றாவது அடுக்காக மாற்றி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகியும் அந்த அமைப்புகளுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. உள்ளாட்சிக்கு உரிய அதிகாரம் தன்னாட்சி இல்லாததற்கு இதுவே…

அமெரிக்காவின் வாக்கு எண்ணிக்கை: இந்தியாவுக்குச் சொல்லும் பாடம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவாகியிருக்கும் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையானது உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியாவுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில் வழக்கத்தைக் காட்டிலும் இந்த முறை இரண்டு மடங்கு அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவலைத்…

உலகின் மூத்த ஜனநாயகம் சொல்லும் செய்தி

இழுபறியாக நீடித்துவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் பெரும்பான்மை உறுதியாகிவிட்டது. எனினும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. தேர்தலுக்குப் பிறகு அஞ்சல் மூலமாக…

ஜார்க்கண்ட் வெளிப்படுத்தும் சமிக்ஞைகள்

ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தியிருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்பு பாஜக 51.6% வாக்குகள் வாங்கியதன் பின்னணியில் இந்தத் தோல்வியை வைத்துப் பார்க்கும்போது குறிப்பிட்ட…

கர்நாடக மக்கள் முடிவெடுக்கட்டும்!

கர்நாடகத்தில் பல வார இழுபறி, அரசியல் அவலங்களுக்குப் பிறகு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியாட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அரசு நிர்வாகத்தை முடக்கிவிட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியான பாஜக விலைக்கு வாங்கியதாகவும் அவர்களைக்…

என்ன சொல்கிறது தமிழ்நாடு?

இந்த மக்களவைத் தேர்தலில், மத்தியில் யார் எவ்வளவு வெல்வார்கள் என்பதிலும் யார் ஆட்சியமைப்பார்கள் என்பதிலும் ஏராளமான கருத்துகள் நிலவின; பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைதான். தீர்க்கமாக எங்கேனும் வெற்றித்திசை தெரிந்தது என்றால், அது தமிழ்நாட்டில் மட்டும்தான். நாடு முழுக்க மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கும்…

ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம்…

வாக்களிப்போம்… சமூகத்தை விமர்சிக்க அது மிக அடிப்படையான தகுதி

உலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலில், தமிழ்நாடு – புதுவைக்கான பங்களிப்பு நாள் இன்று. மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்றும் நாளையும் நடைபெறவிருப்பது இந்தத் தேர்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. இரு…

அமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்!

பதினேழாவது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு 91 தொகுதிகளில் பெரும்பாலும் அமைதியாகவும் வாக்காளர்களின் உற்சாகப் பங்கேற்புடனும் முடிந்திருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் இன்னும் ஆறு பாக்கியிருக்கின்றன. எஞ்சியுள்ள கட்டங்களில் கொஞ்சமும் வன்முறைக்கு இடம் தராமல் நேர்மையாகவும் சுயேச்சையாகவும் வாக்குப்…