Category: சுற்றுப்புறம்

பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?

மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்குக் காற்று மாசு தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

ராமநாதபுரம்: பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு துன்புறுத்தல் தரக்கூடாது என்ற நோக்கில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வனங்களை காத்தால் நாடு வளமாகும்

வனங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. வனங்களை காத்தால் நாடு வளமாகும். கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினை கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணிப்பதில் வனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால்தான், வனத்தை பாதுகாக்க தமிழக அரசு…

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல்படுவது எப்படி?

சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…

கொடைக்கானல் கோடை விழா: மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள் தமிழ்நாடு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குதுகலமாக துவங்கிய கொடைக்கானல் கோடை விழாவில், லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 58வது மலர் கண்காட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்…

அழகான இயற்கை கொஞ்சும் 630 அடி குழி… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 630 அடி குழி உலக மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழி குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பூமியில் நாம் காணாத.. நமக்கு தெரியாத பல அதிசயங்கள்.. ஆச்சர்யங்கள் உள்ளன. என்னதான் மனிதன் வேற்று கிரகங்களில்…

நெகிழி விஸ்வரூபம்! | நெகிழி மறுசூழற்சி குறித்து தில்லியில் நடைபெற்ற சா்வதேச மாநாடு பற்றிய தலையங்கம்

நெகிழிப் பொருள்கள் குறித்தும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகமும், அகில இந்திய நெகிழி உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த…

உடனடி கவனம் தேவை! | காற்றின் தரம் குறித்த தலையங்கம்

மனித இனம் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் காற்றின் தரம் தொடர்ந்து மாசடைந்து வருவதை ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வறிக்கையில், காற்று மிகவும் மாசடைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச்…

மாசுக்களைக் குறைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் இன்றைய திருநாளை

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நமது இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்ட பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைவில் முழுவதுமாக விடுபடுவோம் என்ற நம்பிக்கையை இந்தத் தீபாவளித் திருநாள் வழங்கட்டும். புதிய உற்சாகத்தோடும் புதிய தெம்போடும் இனி வரும் நாட்களை எதிர்கொள்வோம். தீபாவளிப் பண்டிகையைப் பட்டாசு வெடிச்…

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தராதது ஏன்?

அரசுகளும் அரசியல் கட்சிகளும் மிகக் குறைவாகக் கவனம் செலுத்தும் விஷயங்களுள் ஒன்று சுற்றுச்சூழல். பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்றவற்றின் விளைவுகள் மோசமாக வெளிப்பட ஆரம்பித்த பிறகு, முன்னேறிய நாடுகள் தங்கள் செயல்திட்டங்களில் சுற்றுச்சூழலையும் உள்ளடக்கிக்கொண்டன. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலோ…

கரோனா சொல்லும் பாடம்: கட்டற்ற நகர்க் குவிமையமாதலைப் பரிசீலனைக்கு ஆட்படுத்துவோம்

இந்தியாவில் நகர்மயமாதல் தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படவில்லை; மனித வாழ்க்கை முறையின் மேம்பாடாகவும் கருதப்படுகிறது. ஆனால், நகரங்கள் உற்பத்தியில் காட்டிய வேகத்தைத் தங்களது அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் காட்டுவதற்குத் தவறிவிட்டன. அளவுக்கதிகமான மக்கள் நெரிசல் தொற்றுநோய்களுக்கான களங்களாக எப்படி…

சென்னையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம்?

இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக…

பெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்?

இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை, ஒட்டுமொத்த பொருளாதாரத் துக்கும் நல்ல அறிகுறியை உணர்த்தினாலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மனம் பதறவைக்கின்றன. மழை வருவதற்கு முன்பே, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த உயிரிழப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.…

உலகின் நுரையீரலை அழித்துவிட வேண்டாம்!

பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேஸான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை 24 வரை 4,200 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவருகிறது. அமேஸான் நதிப் படுகையானது…

வறட்சியில் மட்டும் முதலிடம் பெற்றுள்ள தமிழகம்

சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் 3,872 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இப்போது, 200 மில்லியன் கனஅடி நீர்கூட இல்லை.…