Category: அரசியல்

Tamilnadu, India and International latest Political news from all leading Tamil News Papers

இம்ரான் கான்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?

பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) நடைபெறவுள்ளது. இம்ரான் கானுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமையன்று என்ன நடக்கும்?…

“இலங்கை போன்ற சூழலை இந்தியா சந்திக்கும், காத்திருங்கள்..!” – ராகுல் காந்தி

அடுத்து மூன்று நான்கு ஆண்டுகளில் திகிலூட்டும் பயங்கரமான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறும்.’ – ராகுல் காந்தி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: நம்பிக்கை வாக்கெடுப்பை முடக்கியது சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இந்த வார இறுதியில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே எந்த சூழலிலும் ராஜினாமா செய்யமாட்டார்; இலங்கை அரசு திட்டவட்டம்: மக்கள் போராட்டம் தீவிரம்

கொழும்பு: அதிபர் கோத்தபய ராஜபக்சே எந்த சூழலிலும் ராஜினாமா செய்யமாட்டார் என்று இலங்கை அரசு அறிவித்த நிலையில் அங்கு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத எரிபொருள்…

இலங்கையில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி.. பெரும்பான்மையை இழந்தது ஆளும் அரசு! ராஜபக்ச பதவி பறிபோகிறது?

கொழும்பு: இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு…

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா? சில அடிப்படைக் கேள்விகளும் பதில்களும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு நாள் நிகழும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசியலில், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நேற்று நடந்தது என்ன? பாகிஸ்தான் ஜனாதிபதி…

லண்டனில் எதிரொலித்த பாக். அரசியல் குழப்பம்! நவாஸ் ஷெரீப் மீது திடீர் தாக்குதல்.. நடந்தது என்ன

பாகிஸ்தான் நாட்டில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது லண்டனிலும் எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் சமாளிக்கத் தவறியதாக…

பாகிஸ்தானை இம்ரான் கான் காப்பாற்றுவார்; நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷம்

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய…

பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினிமா செய்ததாக பரவிய செய்தி தவறு- இலங்கை அரசு விளக்கம்

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு…

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கருத்து

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளில் ஏதாவது ஒரு…

‘ஆணவத்தில் ஆடுகிறது பாஜக; ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்…’ : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறது. இப்போது குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறோம் – பக்வாந்த் மன் பாஜக ஆணவத்தில் ஆடுவதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “பாஜக ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுபட வேண்டும்”

பாஜக ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக, ‘தினமணி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியில், மூன்று நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ…

ஸ்டாலினுக்கு டெல்லியில் கிடைத்த கௌரவம்: புலம்பித் தள்ளும் எடப்பாடி

துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் பயணமாக டெல்லி கிளம்பிச் சென்றார். ஏப்ரல் 2ஆம் தேதி இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள்,…

`புதின் குறித்த அந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’ – ஜோ பைடன் விளக்கம்

புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார். உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டார். ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ…

பாகிஸ்தான்: எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய கூட்டணிக் கட்சி… பெரும்பான்மையை இழந்த இம்ரான் கான் அரசு

இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த MQM கட்சி, தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164-ஆகக் குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே பாகிஸ்தானில், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக, பிரதமர் இம்ரான் கானுக்கு…