Category: தமிழ்நாடு

Tamilnadu latest news from all leading Tamil News Papers

சென்னை: உணவகங்களில் இட்லி, தோசை விலை உயர்வு!

சென்னையில் உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட அனைத்தின் விலையும் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால்,…

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

ரவி Vs ஸ்டாலின்: ஆளுநர் அதிகாரத்தை குறைக்க புதிய மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவினை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார்.…

நாளையும் கொடநாடு எஸ்டேட் வழக்கு விசாரணை இருக்கு.. முடியட்டும் பேசுகிறேன்.. சசிகலா

சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறவுள்ளதால் நாளை பேசுகிறேன் என திநகர் வீட்டில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர்…

சேலம் வழியாக செல்லும் ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயில் மூலம் கஞ்சா கடத்துவதை தடுப்பதற்காக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ரெயில்வே போலீசார் கண்ணன், சக்திவேல், கவியரசு, அருண்குமார், சென்னகேசவன் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் ஜார்கண்ட் மாநிலம்…

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி -முதல்வர் அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், சாதாரண…

ஒன்றாக அமர்ந்த பாஜக, அதிமுக-வினர்… தனியே சென்ற பாமக-வினர்! – ஆளுநரின் தேநீர் விருந்துத் துளிகள்

தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைப் புறக்கணிக்க, எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டன. சித்திரை முதல் நாளையும், தமிழ்ப் புத்தாண்டையும், பாரதியார் சிலை திறப்புவிழாவையும் முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர்…

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: 61 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம்: தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும்…

நரிக்குறவர் இன வீட்டில்… பாசி மணியை அணிந்து கொண்டு காபி, இட்லி சாப்பிட்ட முதல்வர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர். அப்போது,…

ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர்…

‘ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு மாசோதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு…

ஏப். 14- அம்பேத்கர் பிறந்த நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, ஆதிதிராவிடர்…

வெயில் காலம் பற்றி பயமா.. கரண்ட் கட் ஆகாது.. சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

சென்னை: கோடைக்காலத்திலும் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டசபையில் உறுதியளித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அது…

சென்னை அயோத்தியா மண்டப விவகாரம்: பா.ஜனதா முயற்சி பலிக்காது – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் நேற்று பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அயோத்தியா மண்டபம் அப்போது அவர், “நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. சட்ட…

“அடிமடியில்” கை வைத்து.. சறுக்கிய “பொதுச்செயலாளர்” சசிகலா.. எடப்பாடியை விட பாஜக குஷி! அடுத்து என்ன?

சென்னை: இன்றைய தினம் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள சூழலில், அதன் தாக்கங்களும், விளைவுகளும், மாற்றங்களும் இனி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மிகக் கனமழை வாய்ப்பு

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன்…