Category: தமிழ்நாடு

Tamilnadu latest news from all leading Tamil News Papers

ஓயாத கொரோனா அலை

கொரோனா 3-வது அலை குறித்த அச்சம் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே உள்ளது. கொரோனாவின் தாக்கம் இன்னமும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் குறைவதாக இல்லை. அதிகபட்சமாக கேரளாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தலை விரித்தாடுகிறது. கேரளாவின் பாதிப்புகள் தமிழகத்தையும் தாக்குமோ என்ற கவலையில்…

மாற்று அரசியலுக்கான தேர்தல் படிப்பினைகள்

இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றையே மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பாடத்தைத் தமிழக மக்கள் சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக, தங்களை முன்னிறுத்திக்கொண்டு மூன்றாவது இடத்துக்கு முயன்ற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம்,…

வங்கம், கேரளம், அசாம்: தெளிவான தேர்தல் முடிவுகள்

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில் அசாம், வங்கம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவர்களது தெளிவான முடிவையே காட்டுகிறது. மக்களின் முன்னுள்ள அரசியல் தெரிவுகளில் அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவிலிருந்து சில துளிகள்.. “உளமாற உறுதி கூறுகிறேன்…” – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்! தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார்.…

வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின்…நல்லாட்சி தாருங்கள்!

வழக்கம்போல உறுதியான ஒரு தீர்ப்பை 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். திமுகவுக்குத் தனிப் பெரும்பான்மையையும், அக்கூட்டணிக்கு உறுதியான அறுதிப் பெரும்பான்மையையும் வழங்கியிருப்பதன் மூலம், ஒரு சவாலான காலகட்டத்தில் நிலையான ஆட்சி அமைந்திடும் சூழலை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது; அதேசமயம்,…

அரசே, தன்னிலை உணர்!

அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும்கூட சாதிய வன்மத்தோடு சக மனிதர்களைக் கொல்லத் துணியும் வெறுப்புச் சூழலையும், இத்தகு கொலைகள் தலித் சமூகத்தைத் தவிர ஏனையோரிடம் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் கடக்கும் இயல்பு நிலையையும் நம் சமூகம்…

உயரதிகாரியின் அத்துமீறல்: காவல் துறைக்குத் தலைக்குனிவு

காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு டிஜிபியாகப் பொறுப்பு வகித்த மூத்த அதிகாரி மீது காவல் பணித் துறை அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் பாலியல் தொந்தரவுப் புகாரானது ஒட்டுமொத்தக் காவல் துறைக்குமே தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். அரசின் முக்கியப்…

ஜிஎஸ்டி: மாநிலங்கள் துயர நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டும்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது தற்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. பல்வேறு வரிகள் ஜிஎஸ்டிக்குள் உள்ளடக்கப்பட்டதால் மாநிலங்கள் இழந்த வரிவருவாய்க்கான நிவாரணத்தை ஐந்து ஆண்டுகள் அவற்றுக்குக் கொடுப்பதற்கு ஒன்றிய அரசு…

கரோனா சொல்லும் பாடம்: கட்டற்ற நகர்க் குவிமையமாதலைப் பரிசீலனைக்கு ஆட்படுத்துவோம்

இந்தியாவில் நகர்மயமாதல் தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படவில்லை; மனித வாழ்க்கை முறையின் மேம்பாடாகவும் கருதப்படுகிறது. ஆனால், நகரங்கள் உற்பத்தியில் காட்டிய வேகத்தைத் தங்களது அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் காட்டுவதற்குத் தவறிவிட்டன. அளவுக்கதிகமான மக்கள் நெரிசல் தொற்றுநோய்களுக்கான களங்களாக எப்படி…

உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்?

மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க…

மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை

கரோனா எதிர்கொள்ளல் நடவடிக்கையால் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிற நிலையில், ‘கரோனா எதிர்கொள்ளல் சிறப்பு நிதி’ என்ற பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு என்று இந்திய அரசு அளிக்க வேண்டும். கரோனாவை எதிர்கொள்ளும் செலவுகளும், ஊரடங்கு உண்டாக்கியிருக்கும்…

சென்னையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம்?

இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக…

மாநிலங்களுக்கான நிதியில் பாகுபாடு கூடாது

கரோனா தொற்று பெரும் சவாலாக மாறி நாட்டின் முன் நிற்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாகவும் உடனடியாகவும் மத்திய அரசு வழங்குவது முக்கியம். ஆனால், கரோனாவை எதிர்கொள்வதற்கென்று மாநிலங்களுக்காக மத்திய…

மக்கள்தொகைப் பதிவேடு:தமிழக அரசின் சமயோசித நடவடிக்கை!

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து மக்களிடம் அச்சங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக…

ரஜினிகாந்துக்கு விருது???

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்காக…

கீழடி அகழாய்வு: இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்

வைகை நதிக்கரையின் கீழடியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுகளில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அரசு தந்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு கீழடி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற…