டெல்லி: சீனாவின் Deepseek செயலி கேடு தரக்கூடியது என்றால் அதை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனிநபர் தரவு, பாதுகாப்பு வரைவு விதிகளை மீறுவதால் Deepseek செயலியை தடை செய்ய அவசர மனுவாக விசாரிக்க கோரி பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த பிப்ரவரி 12ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை இணைக்க வேண்டும் என உயர் நீதிமனறம் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார், உபாத்யாயா அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள், DeepSeek செயலி பயனாளர்களுக்கு கேடு தரக்கூடியது என்றால், அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். மாறாக அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியதோடு, அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்து வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
The post “Deepseek” செயலி கேடு தரக்கூடியது என்றால் அதை பயன்படுத்த வேண்டாம்: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து! appeared first on Dinakaran.