in , ,

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார பகுதியில் நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிடிஐ செய்தியும் உறுதிப் படுத்தியது.

இந்நிலையில், அவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், 3 மணிக்குதான் தண்டனை விவரம் முழுமையாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Jayalalithaa to guilty verdict

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி: பெங்களூர் நீதிமன்றம் அறிவிப்பு

2.35 PM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங், ‘தி இந்து’விடன் கூறியதாவது: “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்படும்.

‘முதல்வர் பதவியை இழக்கிறார் ஜெயலலிதா’

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது” என்றார்.

 சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவர் பதவியை இழக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு துவங்குகிறது.

நோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு

வெற்றியின் பின்னால் இருக்கும் எச்சரிக்கை