வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

சமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது போதாதென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலும் பாகிஸ்தான் 80வது இடத்திலும் இருக்கிறது.

வளரும் பொருளாதார நாடுகள் தரவரிசைப் பட்டியல்: 62-வது இடத்தில் இந்தியா- ஹிந்து நாளிதழ் 

உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள வளரும் பொருளாதார நாடுகள் குறித்த வரிசைப் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது. சீனா 26-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்திலும் உள்ளன.

உலக பொருளாதார மைய த்தின் ஆண்டு கூட்டத்துக்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரவரிசைக் குறியீடு வெளியிடப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை, வருங்கால தலைமுறைக்கான சமூக பாதுகாப்பு அடிப்படை யில் இந்த தரவரிசை அளிக்கப்படுகிறது. 103 நாடுகள் கொண்ட பட்டியலில், மேம்பாட்டை உள்ளடக்கிய வளர்ச்சியில் 29 நாடுகளும், தலைமுறைக்கான சம வாய்ப் பில் 74 நாடுகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. -பிடிஐ

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 122-வது இடம் – பாலிமர் செய்திகள் 

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 155 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம், தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தயாரான இந்தப் பட்டியலில், நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் உள்ளன. பட்டியலில் கடந்த ஆண்டு 118 -ம் இடத்தைப் பிடித்திருந்த இந்தியா, இந்த ஆண்டு 4 இடங்கள் சரிந்து 122- வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 80- வது இடத்திலும், நேபாளம் 99 வது இடத்திலும், இலங்கை 110- வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிற்கு ஏனிந்த நிலை பாகிஸ்தானைவிட அப்படியென்ன நாம் குறைந்து போய்விட்டோம் நமது தவறு எங்கே இருக்கின்றது என்பதையெல்லாம் நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

எதனால் இந்த நிலை நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் 40வது இடத்தில் பாக்கிஸ்தான் இருக்கிறது என்றால் அது முன்னேறி இருக்கிறது என்று அர்த்தமல்ல நாம் பின்னோக்கி சென்று கொண்டிக்கிறோம், நாம் நன்றாகத்தானே இருந்தோம் பல நாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவல்லவா இருந்தோம் ஏனிந்த திடீர் மாற்றம் என்ன தான் நடக்காது நம் நாட்டில். வேற்றுமையில் ஒற்றுமை, மதசகிப்புத்தன்மை, பிறர் நலன் பேணுதல் இன்னும் பல நல்ல பண்புகளில் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆம் சமீப காலமாக மக்களிடம் ஒரு விரக்தியான மனநிலை ஏற்பட்டிருக்கின்றது அதன் வெளிப்பாடாக ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்தார்கள் நாடும் நாட்டு மக்களின் உண்மை நிலையை மறைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை வல்லரசாக மாற்றுவோம் பணக்கார நாடாக ஜொலிக்க வைப்போம் எல்லோரையும் செல்வந்தர்களாக்குவேம் என்ற மாயையை ஏற்படுத்தினார்கள் மக்களும் அந்த மாய வலையில் வீழ்ந்து விட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிப்போனது பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் எப்படி ஆட்சி செய்வார்கள். அவர்கள் சாயம் வெளுத்க துவங்கியுள்ளது கிறுக்குத் தனமான சட்டங்கள், வரலாற்றை கதை என்றும் கற்பனை கதைகளை வரலாறென்றும் திரிக்கத் துவங்கினார்கள், அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்தவர்கள் மத்தியில் வெறுப்யை ஏற்படுத்தினார்கள் கருப்பு பணத்தை  ஒழிக்க போகிறேன் என்று முட்டாள்தனமான சட்டங்களை போட்டார்கள் அதனால் என்ன நடந்தது டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் அடிவயிற்றில் புளியை கரைக்கிறது .

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது.

ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 சதவீதம் ஆகும். சீனாவின் வளர்ச்சி சதவீதமான 6.9 விட இது குறைவாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி சதவீதமான 6.0விட தற்போதைய காலாண்டின் வளர்ச்சி சதவீதம் குறைவு எனவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் அறிவித்த ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு எதிர்பாராத பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஐசிஐ நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரசன்னா, ‘இந்த டேட்டாக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. நவம்பருக்கு பிறகான பணத்தாள் விவகாரம் காரணமாகக்கூடும்’ என்கிறார்.

மோடியின் எதிர்பாராத முடிவு வரி செலுத்தப்படாத பணத்தை வெளிக்கொணரும் என கருதப்பட்டது.  நேரடியாக பணத்தாள்களை செலுத்தி தங்களுக்கு தேவையானதை பெரும்பாலானவர்கள் பெற்றுக்கொள்ளும் நிலையில் அது எதிர்விளைவையே ஏற்படுத்தியது.

நாடு முன்னேறுவதற்கு தடைக்கல்லாக இருக்கும் பிரச்சனைகளை களைவதற்கு பாடுபடுவதை விட்டுவிட்டு மதப்பிரச்சனைகளிலும் மூடநபிக்கையிலும் மும்முரமாக செயல்படுகிறது இந்த அரசு. நாட்டையும் நாட்டுமக்களின் நிலைமையையும் அறியாமல் தான்தோன்றித்தனமாக மோடி அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகளும், அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற மதவெறியர்கள் மக்களிடையே ஏற்படுத்துகின்ற கசப்புணர்வுகளும் தான் நமது நாட்டை கீழ்நோக்கி அதலபாதாளத்திற்கு தள்ளுகின்றது. இந்த இழிநிலை மாறாவிட்டால் மதச்சண்டைகள் இனச்சண்டைகளென்று ஆரம்பித்து நாடு துண்டு துண்டாக சிதறிவிடுமென்ற அபாய அறிவிப்பே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published.