நியூஸிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 2, டாம் லேதம் 47, ரச்சின் ரவீந்திரா 34, டேரில் மிட்செல் 19, கேன் வில்லியம்சன் 93, டாம் பிளண்டெல் 17, நேதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 41, டிம் சவுதி 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 91 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிம் சவுதி 15 ரன்களிலும், வில் ஓ’ரூர்க்கி ரன் ஏதும் எடுக்காமலும் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தனது 5-வது சரை சதத்தை அடித்தை கிளென் பிலிப்ஸ் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்லில் பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.