சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல ஊதியத்தையும் அளித்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு பணிபுரிந்து வருபவர்களில் சில சங்கிகள் இந்தியாவில் செய்வதை போல், வளைகுடாவிலும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய மதம், அவர்களின் புனிதத் தலமான கஃபத்துல்லாவை கொச்சைப்படுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இந்திய நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு செய்யும் சங்கிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இது அரபு நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலரது கவனத்துக்கு சென்றுள்ளதால் இந்தியர்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். இந்த சங்கிகளின் செயலால் அங்கு உழைத்து பொருள் ஈட்ட சென்ற இந்தியாவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அல்லாத சாமானிய இந்துக்களுக்கும் நெருக்கடி அதிகரித்து உள்ளது.

வளைகுடாவில் உள்ள இந்துக்களில் 90%-க்கும் மேற்பட்டோர் எந்த மதவாத அமைப்புகளுக்கும் ஆதரவளிக்காமல் தங்கள் பிழைப்பை பார்த்து வருபவர்கள் தான். கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை அரபு நாடுகளையும் தாக்கி, பலருக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அரபிகளை ஆத்திரமடைய செய்துள்ள சங்கிகளின் செயலால் தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என சாமானிய இந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், சங்கிகளுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Source www.newsu.in

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *