வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரட்டும்

 அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பது, சில நாட்களாக நீடித்துவந்த பதற்ற நிலையைத் தணிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 26 அன்று அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்ட எல்லையில் இரு மாநிலக் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட… Read more

அரசைக் கேள்வி கேட்பதும் அடிப்படை உரிமை!

பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக, அவதூறு வழக்கைச் செல்லாது என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அரசின் நடவடிக்கைகள் குறித்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் தேசத் துரோகத்தின் கீழ் வராது என்று வழிகாட்டும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்பால்… Read more

ஊரடங்கைத் தடுக்க சுயகட்டுப்பாட்டை ஆயுதமாக்குவோம்

கரோனா விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாது என்று எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. கடந்த சில வாரங்களில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது… Read more

உயரதிகாரியின் அத்துமீறல்: காவல் துறைக்குத் தலைக்குனிவு

காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு டிஜிபியாகப் பொறுப்பு வகித்த மூத்த அதிகாரி மீது காவல் பணித் துறை அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் பாலியல் தொந்தரவுப் புகாரானது ஒட்டுமொத்தக் காவல் துறைக்குமே தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். அரசின் முக்கியப்… Read more

அர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாட, அவரிடமும் அவரது சக நீதிபதிகளிடமும் ஒப்பளிக்கப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டக் கடமையை ஆற்றுவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழியிருக்க முடியாது. ‘உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றம்… அரசமைப்புச் சட்ட நீதிமன்றமே… Read more

மாநில அரசின் உரிமை இடஒதுக்கீடு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில், மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் விதமான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகளும் வரவேற்புக்குரியவை. பின்தங்கியவர்களிலும் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயனைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதும், அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்… Read more

நீதித் துறைக்குத் தேவை சகிப்புத்தன்மை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைக் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதும் இந்த வழக்கை அது அணுகிவரும் முறையும் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளும் தன்மை அதற்கு இல்லை என்பதையே உணர்த்துகின்றன. நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட இந்த வழக்கில், மூன்று… Read more

தொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை

முன்விரோதம் காரணமாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகத்தையே அதிர்ச்சியில் தள்ளிய தலைகுனிவு. ஆளுங்கட்சி பின்னணியிலிருந்து வந்த அந்தக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் வேகமான, கடுமையான தண்டனையே இத்தகு குற்றங்களைக் குறைக்கும்.… Read more

அடித்தட்டு மக்கள் மறக்கப்படுவது பெரும் மானுடத் துயரம்

இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால், உள்நாட்டுக்குள் வேலைக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊர் திரும்ப வழியின்றி நிலைகுலைந்திருக்கின்றனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல நூறு தொழிலாளர்கள் கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு, குழந்தைகளை நடக்க விட்டும் தூக்கிக்கொண்டும் டெல்லியிலிருந்து பல… Read more

மக்கள்தொகைப் பதிவேடு:தமிழக அரசின் சமயோசித நடவடிக்கை!

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து மக்களிடம் அச்சங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக… Read more

காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது அரசு. இதே பிரிவின்… Read more

குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்?

இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது. சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பார்க்க சொல்லி பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும்… Read more

பிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது!

  வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாடும் வெளியிலிருந்து தன் நாடு நோக்கி வருபவர்களை வரைமுறைப்படுத்த குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு என்று ஒரு… Read more

குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த… Read more

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. கணக்கில் வராத… Read more

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல

மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகள், ‘சட்ட விரோதமானவை அல்ல’ என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும், உலக நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருந்த கருத்து… Read more