புதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா

previous-search-zone

பெர்த்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.

புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் விமானத்தின் உடையது தான் என்பதை கப்பல்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிப்படுத்தும் தகவல் கிடைக்கவில்லை எனவும் அமசா கூறி உள்ளது

ஆனால் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை (AMSA)   மலேசிய விமானத்தின் பொருளதான என இதுவரை சரிபார்க்கபடவில்லை.

தற்போது வானிலை சாதகமாக உள்ளது மதியத்திற்கு மேல் மோசமாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது எனறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில்  உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார்.

மிதக்கும் பொருட்கள் நீலம்  மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP