பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு

Narendra Modi became The country's 15  prime minister  (1)

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, உமா பாரதி, டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா, கோபி நாத் ராவ் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக கல்ராஜ் மிஷ்ரா, மேனகா காந்தி, ஆனந்த் குமார், ரவி சங்கர் பிரசாத், அசோக் கஜபதி ராஜூ, அனந்த கீதி, ஹர் சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றது.

Narendra Modi became The country's 15  prime minister  (2)

நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியுடன் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்றனர்.

சார்க் நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பூடான், நேபாள பிரதமர்கள், மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP