சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X8 ஸ்மார்ட்போன் சீரிஸ்களை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ Find X8 புரோ மற்றும் ஒப்போ Find X8 போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.