நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்

modi calls nawas sharifபுதுடில்லி:நாட்டின், 14வது பிரதமராக, பாரதிய ஜனதாவை சேர்ந்த, நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தரப்பில், அதன் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் நடந்த, 16வது லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., மட்டும், 282 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும்பான்மை பெற்றது.இதையடுத்து, பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அவரும், அவரது தலைமையிலான, அமைச்சரவையும் நாளை, டில்லி ராஷ்டிரபதிபவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறது.இந்த விழாவில் பங்கேற்கும்படி, பாகிஸ் தான், இலங்கை உட்பட, சார்க் எனப்படும், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள தலைவர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததற்கு, காங்கிரஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ‘பயங்கரவாதமும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமரச பேச்சுவார்த்தையும், ஒன்றாக கைகோர்த்து செல்ல முடியாது’ என, முன்னர் விமர்சித்த, பா.ஜ., இப்போது மட்டும், மோடி பதவியேற்பு விழாவுக்கு, பாக்., பிரதமரை அழைப்பது ஏன்? என்றும், கேள்வி எழுப்பியது.

ஆலோசனை
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, இந்தியா தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தன் நெருங்கிய உதவியாளர்கள் பலருடன் ஆலோசனை நடத்தினார்.அத்துடன் நவாஸ் ஷெரீப் தம்பியும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வருமான, ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டின் ராணுவ தளபதியான, ஜெனரல் ரஹீல் ஷெரீப்பையும் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுநடத்தினார்.அப்போது, இந்தியா – பாக்., இடையே நல்லுறவு மலர, மோடி பதவியேற்பு விழாவில், நவாஸ் ஷெரீப் பங்கேற்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆலோசனைகளுக்குப் பின், மோடி பதவியேற்பு விழாவில், பங்கேற்பது என, நவாஸ் ஷெரீப் முடிவு செய்தார்.

பாக்., பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர், இதுபற்றி கூறுகையில், ‘இந்தியாவின் அடுத்த பிரதமராக, மோடி பங்கேற்கும் விழா, திங்கட்கிழமை மாலை, டில்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பார்’ என, தெரிவித்தார்.நாளை டில்லி வரும், நவாஸ் ஷெரீப்புடன், அவரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகார ஆலோசகர், சர்தாஜ் ஆசிஸ், சிறப்பு உதவியாளர், தாரிக் பாத்மி, பாக்., வெளியுறவு செயலர், அய்சாஸ் சவுத்ரி உட்பட, உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர். பதவியேற்பு விழாவில், நாளை பங்கேற்கும் நவாஸ் ஷெரீப், நாளை மறுநாள் காலை, புதிய பிரதமர் மோடியுடன், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசும் அவர், மதியம் இஸ்லாமாபாத் திரும்புகிறார். நவாஸ்ஷெரீப்பின் இந்திய விஜயத்திற்கு, பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள, பழமைவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமுக உறவு
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நவாஸ் ஷெரீப் சம்மதம் தெரிவிக்கும் முன், அவரின் மகள் மர்யம், சமூக வலைதளத்தில் உள்ள தன் வலைப்பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், ‘இந்தியாவில் புதிதாக பதவியேற்க உள்ள மோடி அரசுடன், பாக்., அரசு சுமுக உறவை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அப்படி சுமுக உறவு அமைந்தால், இரு நாடுகளுக்கு இடையே, உளவியல் ரீதியாக உள்ள தடைகள், அச்சம் மற்றும் அவநம்பிக்கைகள் அகலும்’ என, தெரிவித்திருந்தார்.இதிலிருந்தே, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நவாஸ் ஷெரீப் விரும்புகிறார் என்பது தெளிவானது; தற்போது, அது உறுதியாகி உள்ளது.அதே நேரத்தில், மோடியின் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., மகிழ்ச்சி; காங்கிரஸ் கடுப்பு
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் சம்மதம் தெரிவித்துள்ளதற்கு, பா.ஜ., மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் கடுப்படைந்து உள்ளது.”நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அவரது பதவியேற்பு விழாவில்
Advertisement

கலந்து கொள்ள, நவாஸ் ஷெரீப் சம்மதம் தெரிவித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செய்தி நல்ல செய்தி. இது, இரு நாடுகளுக்கு இடையேயான புதிய உறவுக்கு துவக்கம்,” என, பா.ஜ., தகவல் தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார். ‘பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், இலங்கை, மியான்மர் போன்றவை இந்தியாவின் அண்டை நாடுகள். அந்த அண்டை நாடுகளை மாற்ற முடியாது’ என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில், நவாஸ்ஷெரீப்பின் சம்மதம், காங்கிரசுக்கு கடுப்பேற்றியுள்ளது.

இதுதொடர்பாக, காங்., மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியதாவது:பயங்கரவாதமும், இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையும், ஒன்றாக கைகோர்த்து செல்ல முடியாது என, பா.ஜ., இதுவரை கூறி வந்துள்ளது.மத்தியில் மோடி தலைமையிலான, புதிய அரசு பதவியேற்றதும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தானில் நடக்கும், மும்பை தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை மெதுவாக நடப்பது, மும்பை குண்டு வெடிப்பு பயங்கரவாதி, தாவூத் இப்ராகிமை ஒப்படைப்பது போன்ற பிரச்னைகளை, நவாஸ் ஷெரீப்பிடம், பா.ஜ., அரசு எழுப்ப வேண்டும்.இவ்வாறு, திவாரி கூறியுள்ளார்.

பங்கேற்கும்தலைவர்கள் யார் யார்?
மோடி பதவியேற்பு விழாவில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தவிர, இலங்கை அதிபர் ராஜபக்?ஷே, ஆப்கானிஸ் தான் அதிபர் ஹமீது கர்சாய், பூடான் பிரதமர் துசரிங் தோப்கே, நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதற்கான சம்மதத்தை அவர்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டனர்.வங்கதேச அரசு சார்பில், அந்நாட்டு பார்லிமென்டின் சபாநாயகர் பங்கேற்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP