உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப் யூஸர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, தன் அம்சங்களை மேம்படுத்துவதில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆடியோ மெசேஜ்களில் பல்வேறு அப்டேட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், விரைவில் பல மாதங்களாக யூஸர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, 2GB வரையிலான மீடியா ஃபைல்ஸ்களை யூஸர்கள் ஷேர் செய்ய வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. யூஸர்களிடையே ஃபைல் பரிமாற்றத்திற்கான 2GB திறனை வாட்ஸ்அப் டெஸ்ட் செய்து வருவதாக தெரிகிறது. ஃபைல்-ஷேரிங் கேப்பபிளிட்டி (File-sharing capabilitie) வாட்ஸ்அப் சேவையின் முக்கிய அம்சமாக மாறி உள்ளன. மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் Chat-களுக்குள் மீடியா ஃபைல்ஸ்களை ஷேர் செய்யும் திறனை வாட்ஸ்அப் உள்ளடக்கி உள்ளது, ஆனால் அதன் ஃபைல் சைஸ் லிமிட்டேஷன் 100MB என்பது இன்னும் மாறாமல் அப்படியே தொடர்வது யூஸர்களிடையே நீண்ட காலமாக அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது வரை வாட்ஸ்அப்பில் 100MB அளவுள்ள மீடியா ஃபைல்ஸ்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்ற நிலை விரைவில் மாறும் என்ற தகவல் யூஸர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது File-sharing capabilitie தொடர்பாக டெஸ்ட்டிங் செய்யப்பட்டு வருவது உண்மை என்றாலும், இது ஒரு தற்காலிக உள்ளூர்மயமாக்கப்பட்ட சோதனையா (temporary localised test) அல்லது சர்வதேச யூஸர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான தொடக்கமா என்பதில் சில நிபுணர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் வாட்ஸ்அப் டெவலப்மெண்ட் டிராக்கர் WABetaInfo அறிக்கை படி, வாட்ஸ்அப் நிறுவனம் அர்ஜென்டினாவில் இந்த அம்சத்தை தற்போது டெஸ்ட் செய்து வருகிறது. WABetaInfo ஷேர் செய்துள்ள புதிய அம்சம் தொடர்பான ஸ்கிரீன்ஷாட். வாட்ஸ்அப்பின் பாப்-அப் நொட்டிஃபிக்கேஷன் “நீங்கள் 2 ஜிபி வரை மீடியா ஃபைல்ஸ்களை அனுப்பலாம்” என்று கூறுகிறது. அர்ஜென்டினாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே ஐந்தாம் அம்சம் கிடைக்கிறது. எனவே இதே அம்சத்தை எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். ஸ்மார்ட் போன்களின் கேமராக்கள் சிறப்பாகவும், டேட்டா ஸ்பீடாகவும் கிடைப்பதால் யூஸர்களுக்கு இது மிகவும் தேவையான அம்சமாக இருக்கிறது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *