டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறது. இப்போது குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறோம் – பக்வாந்த் மன்
பாஜக ஆணவத்தில் ஆடுவதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
டெல்லி, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் பார்வை தற்போது குஜராத் பக்கம் திரும்பியுள்ளது. இங்கு இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் அருகே டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். இதில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி முதல்வர் பக்வாந்த் மன்னும் கலந்து கொண்டார்.
பேரணிக்கு பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ‘நான் இங்கு எந்தக் கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. நான் இங்கு பாஜகவை தோற்கடிக்க வரவில்லை. நான் இங்கு காங்கிரசை வெல்ல வரவில்லை. நான் குஜராத் வெற்றி பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். குஜராத்தும் குஜராத் மக்களும் வெற்றி பெற வேண்டும். குஜராத்தில் இருக்கும் ஊழல் முறைகேடுகளை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.