
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரபல கூகுள் நிறுவனம் ரூ.87,570 கோடி செலவில் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இதற்காக டெல்லியில் இன்று ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்பெரிய டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. ரூ.10 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.87,570 கோடி) மதிப்பீட்டில் இந்த டேட்டா சென்டர் அமைய உள்ளது. ஆதலால் இது நாட்டின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக கருதப்படுகிறது. இதற்காக நேற்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் டெல்லிக்கு சென்றனர்.

