
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறையின் விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதாக அத்துறையின் மாவட்ட‌ ஆணையர் அருந்ததி சந்திரசேகர் தெரிவித்தார்.

