சென்னை: தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் திமுக குரல் எழுப்பும் என சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுப்பது உள்ளிட்டவற்றுக்காகவும் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவர். தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி அளிக்க வலியுறுத்தியும் குரல் எழுப்பப்படும். தமிழ்நாட்டின் பிரச்சினைகள் மட்டுமின்றி நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் குரல் எழுப்பப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்துக்காகவும் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவர்.
The post இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் திமுக குரல் எழுப்பும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.