கோவை: நாட்டிலே முதன்முறையாக இரு மருத்துவமனைக்கு இடையே இணைமற்று, கல்லீரல் அறுவை சிகிச்சை கோவையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக ஒரே குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இடையில்தான் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் உள்ள ஜெம் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கல்லீரல் மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் கல்லீரல் தானமளிக்க முன்வந்த போது ரத்தவகை பொருந்ததால் அதை சாத்தியமற்றது என்று தெரியவந்தது.
இந்த சூழலில் தானமளிக்கும் இருவரும் கல்லீரல்களையும் மாற்று நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனுமதியை கிடைத்ததை அடுத்து, இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் இருவரின் மனைவிகள் கல்லீரல்கள் பெறப்பட்டு இணை மாற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 27 லட்சம் ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகளும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.