
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் தெலுங்கு நடிகை லீலாவும் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலிலிருந்த நந்தி சிலைக்கு இவர்கள் அபிஷேகம் செய்தனர். பின்னர், இவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் அவர்களை கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

