
ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் மேல்மட்ட சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
ஆகாஷ் சவுத்ரி 8 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். மேகாலயா அணி 628/6 என்று டிக்ளேர் செய்தது.

