நாகர்கோவில்: நாகர்கோவில் – பணகுடி இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்தவர் பையில் இருந்த ஆவணங்கள் மூலம் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் சந்திரமோகன் (71) என்பதும், மகேந்திரகிரி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் தெரிய வந்தது.
அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்தான் அவரது மனைவி இறந்துள்ளார். அதன்பின் திருவனந்தபுரத்தில் பிள்ளைகள் கவனிப்பில் இருந்துள்ளார். சந்திரமோகன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.