
சென்னை: கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

