சென்னை: 2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்தது, போலியான PAN எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழக்கிற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் கே.சி.வீரமணி தேர்தல் ஆணையத்தின் வழக்கிற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலியான PAN எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
The post கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.