கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு எடுத்துள்ளது.
கோவையில் உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவை தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நான்கு இடங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டதில் அதில் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையின் 20.72 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வர் அதற்கான ஆலோசனை கூட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தார். அந்த வகையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. இதனடிப்படையாக கொண்டு கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்யும் நடவடிக்கையில் விளையாட்டுத்துறை ஈடுபட்டுள்ளது.
The post கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம்! appeared first on Dinakaran.