வாரணாசி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளா சிவராத்திரி தினமான இன்றுடன் முடிவடைகிறது. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் அயோத்திக்கும் காசிக்கும் வருகின்றனர். இதனால் இந்த 3 இடங்களிலுமே கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டுகிறது. சி இந்நிலையில் சிவராத்திரி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழகத்தை சேர்ந்த 2019 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி வாரணாசி ஏடிசிபி சரவணன் கூறியதாவது: இந்த ஆண்டு சிவராத்திரிக்கு உள்ளூர் மக்களையும் சேர்த்து 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் வாரணாசியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வாரணாசி பதிவெண் தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அவை வாரணாசியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு விடும். இந்த முறை ஏஐதொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து கூட்ட நெரிசலை சிறப்பிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
மேலும், டிரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். இரவிலும் இவற்றின் மூலம் எளிதாக கண்காணிக்கலாம். இது தவிர வெப்ப அளவீடு முறையும் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் அந்த இடத்தில் வெப்பம் அதிகமாக காட்டும். அத்தகையிடங்களில் கூடுதல் போலீசாரை அனுப்பி கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
The post சிவராத்திரிக்கு வாரணாசி வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன், ஏஐ தொழில்நுட்பம்: வாரணாசி ஏடிசிபி சரவணன் தகவல் appeared first on Dinakaran.