
‘டிசி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர்.

