திருவாரூர்: தமிழகத்துக்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி வளர்ச்சிக்காக முதல்வருக்கு நிதி அனுப்ப தொடங்கி உள்ளனர். அதன்படி, திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் தமிழரசன்-மாலதி ஆகியோரின் மகள் அட்சயா, மாநில அளவிலான கலைப் போட்டியில் தனக்கு கிடைத்த முதல் பரிசு ரூ10 ஆயிரத்தை கல்வி வளர்ச்சி நிதியாக முதல்வருக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் மோகனசந்திரனிடம் வழங்கினார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
The post தமிழக கல்வி வளர்ச்சிக்கு ரூ10,000 வழங்கிய மாணவி appeared first on Dinakaran.