
சென்னை: ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். தற்போது இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். இதில் பிரார்த்தனா, மீனாட்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்து வருகிறார். முழுக்க காமெடி கலந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் நிதிஷ் சஹாதேவ். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

