சென்னை: தைலம் மற்றும் கற்பூரம் கலந்து உடலில் தேய்த்ததால் 8 மாத குழந்தை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சென்னை அபிராமபுரம் ஆர்.கே.சாலை வல்லவன் நகரை சேர்ந்தவர் தேவநாதன்(28). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 13ம் ேததி குழந்தைக்கு அதிகளவில் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டு வைத்தியம் என்று தைலத்துடன் கற்பூரம் கலந்து குழந்தையின் மார்பு, மூக்கில் தேய்த்துள்ளனர்.
சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே தேவநாதன் தனது குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று உயிரிழந்தது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் குழந்தையின் தந்தை தேவநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி appeared first on Dinakaran.