
புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

