சென்னை: சிங்கப்பெருமாள்கோவில் பணிமனையில் பராமரிப்புப் பணி நடப்பதால் மின்சார சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 12 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்துள்ளனர். சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கம். காஞ்சிபுரம் -சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே பகுதியாக ரத்து. செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 12 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் appeared first on Dinakaran.