
உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் பிட்ச்களில் பவுன்ஸும் பந்துகள் நல்ல வேகத்துடன் செல்ல வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக அகமதாபாத் பிட்ச் ஓரளவுக்கு பரவாயில்லை, ஆனால் டெல்லி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத பிட்ச் என்பதை டெல்லியை சேர்ந்த கம்பீரே ஒப்புக் கொண்டதற்கு சமமானதே இந்த கோரிக்கை. இந்திய அணி டெல்லி டெஸ்ட்டில் 200 ஓவர்கள் களத்தில் நிற்க வேண்டியிருந்ததால் கம்பீர் இந்த ஸ்டேட்மெண்ட்டை விடுகிறாரே தவிர வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கொஞ்சம் சாதகம் இருந்து அந்தச் சவாலை இந்திய அணி சந்திக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்துவது போல் தெரியவில்லை.

