
மும்பை: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.
“பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

