பாட்னா: பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு பாஜகவை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிஹாரில் 2005 முதல் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார். 2014 மே முதல் 2015 பிப்ரவரி வரை ஓராண்டுக்கும் குறைவான கால கடத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி முதல்வராக பதவி வகித்தார். பின்னர், 2015 நவம்பர் முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிஷ் குமார் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வருகிறார்.