கோவை: நாடாளுமன்ற தொகுதி மறு வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தமிழக முதல்வர் தவறான தகவல்களை தெரிவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.