
சென்னை: செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சனி மாநில அரசு சார்பில் ‘தமிழ்நாடு – சாக்சனி இடையிலான வணிக மாநாடு – 2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் சாக்சனி மாநிலத்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் டிர்க் பான்டர், ஜெர்மனி துணைத் தூதர் மைக்கேல் ஹேஸ்பெர், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை செயலர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

