
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்தன. கடந்த 1925-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்கப்பட்டது கிடையாது.

