கோவை: விகிதாசார அடிப்படையில் செய்யப்படும் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறையாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பாரதமாதாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
பிரதமர் மோடி தலைமையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருமையான பட்ஜெட் தந்துள்ளார். நடுத்தர வர்க்கம், குறு சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2026 பாஜக தமிழ்நாட்டில் வெற்றியுடன் தொடங்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் உருவாகும் பாஜக ஆட்சி புது உகத்தை ஏற்படுத்தும். விகிதாசார அடிப்படையில் செய்யப்படும் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறையாது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். என்றார்.
The post விகிதாசார அடிப்படையில் செய்யப்படும் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறையாது: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு! appeared first on Dinakaran.