வாஷிங்டன்: அமெரிக்காவின் விமானப்போக்குவரத்து தகவல் தொடர்பு அமைப்பு தற்போது வெரிசோன் நிறுவனத்திடம் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வெரிசோனுக்கு வழங்கப்பட்ட 2பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை கையகப்படுத்த எலான் மஸ்க் முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கின் உபகரணங்கள் பெடரல் விமான நிர்வாக வசதிகளில் நிறுவப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைவர் மற்றும் ஸ்டார்லிங்க் தலைவருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் பழையதாகி வருகின்றது. அதனை நவீனமயமாக்குவதற்கு கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை தேவை. வெரிசோன் அமைப்பு வேலை செய்யவில்லை. அதனால் விமான பயணிகளை கடமையான ஆபத்தில் ஆழ்த்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். நவீனமயமாக்கல் முயற்சியில் வெரிசோன் சுமார் 200மில்லியன் டாலர் மதிப்பிலான பணிகளை ெசய்துள்ளது. ஒப்பந்தம் திருத்தப்படுவது அல்லது நிறுத்தப்படுவது குறித்து நிறுவனத்துக்கு இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
The post விமானப்போக்குவரத்து தகவல் தொடர்பு நவீனமயமாக்கல் வெரிசோன் நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தத்தை கைப்பற்ற மஸ்க் தீவிரம் appeared first on Dinakaran.