விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் சரவணா பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேலான பட்டாசு தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துருகிறார்கள்.
சிறுவர்கள் வெடித்து மகிழ கூடிய தரைசக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளை தாயாரித்து கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ரசாயனம் உள்ள பொருட்களில் ஏற்பட்ட உறைவுகாரணமாக பயங்கர வெடி விபத்து என்பது ஏற்பட்டுருக்கிறது. இந்த வெடி விபத்தில் ஒரு அரை சேதம் அடைந்துஇருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் அந்த அறையில் பணியாற்றிகொண்டிருந்த ஒரு தொழிலாளர் 30 சதவித தீ காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தீ அணைப்பு மற்றும் மீட்பு பணியில் தற்போது தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள் தீ அணைப்பு மீட்பு பணியானது துவங்கி இருகிறது.
மேலும் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்தான முழுமையான விவரம் இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும் தற்பொழுது அந்த மிட்பு பணியானது துரிதமாக நடைபெற்றுவருகிறது.
தொடர்ந்து இந்த வருவாய் துறையினரும் இந்த வெடி விபத்திற்க்கான காரணம் விதிமுறைமீறல் ஏதேனும் உள்ளதா என்பதை குறித்து முதல் கட்டஆய்வினை மேற்கொண்டுவருகிறார்கள் தற்போது நிலவரபடி ஒரு தொழிலாளர் காயத்துடன் மிட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் உள்ளே தொழிலாளர்கள் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறபடுகிறது மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் உள்ள பட்டாசு :அலையில் வெடி விபத்து appeared first on Dinakaran.