
ஆக்லாந்து: நியூஸிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுமார் 80 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 14 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடிய நிலையில் 3.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது.

