மும்பை: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு அடுத்தபடியாக ‘இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா.