ஹேக்: “நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது தானே என்று ட்ரம்ப் கூறுவது இது 18-வது முறையாகும்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டதில் இருந்தே, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார்.